ADDED : மார் 24, 2025 04:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி வர்த்தக சபைக்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
புதுச்சேரி வர்த்தக சபைக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 2025-28ம் ஆண்டிற்கான 15 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
வள்ளலார் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் காலை 8:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 வரை நடந்த ஓட்டுப்பதிவில், 292 ஆயுள் கால உறுப்பினர்கள், 88 ஆண்டு உறுப்பினர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு செய்தனர்.பின்னர், மதியம் 3:00 மணியளவில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கப்பட்டு, 15 நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்தலையொட்டி, திருமண நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.