தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொறையாத்தம்மன் கோவிலில் தேரோட்டம் 

பொறையாத்தம்மன் கோவிலில் தேரோட்டம் 

பொறையாத்தம்மன் கோவிலில் தேரோட்டம் 


ADDED : ஆக 16, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பொறையாத்தம்மன் கோவிலில் 100வது ஆண்டு தேர் வீதிவுலா நேற்று நடந்தது. 

புதுச்சேரி, தமிழ்த்தாய் நகர், பொறையாத்தம்மன், தமிழ்தாய் நாயகி உடனுறை சாமமூர்த்தீஸ்வரர் கோவிலில் 100ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கல் நடந்தது.

கடந்த 7ம் தேதி அம்மனுக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, துர்க்கை பூஜை, கணபதி ஹோமம், 8ம் தேதி சாகை வார்த்தல், மாலை கொடியேற்றம், காப்பு கட்டுதல், கும்பம் படையல் நடந்தது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு அலங்கார வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்வாக, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

இன்று (17ம் தேதி) மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், நாளை (18ம் தேதி) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஆனந்த், ராஜாராமன், அருள் கருணாகரன், பத்மநாபன் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us