நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, முத்திரையார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்மநபர், பிரபல நகைக்கடையில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.அதில், மர்ம நபர் அப்பெண்ணிற்கு 32 கிராம் தங்கள் பரிசு விழுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அந்த பரிசை பெறுவதற்கு செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.இதைநம்பிய அப்பெண் மர்மநபருக்கு 13 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆண் நபர் 10 ஆயிரத்து 500, பூமியான்பேட்டையைச் சேர்ந்தவர் 8 ஆயிரம், கரையாம்புத்துாரைச் சேர்ந்தவர் 1 ஆயிரத்து 100 என 4 பேர் மோசடி கும்பலிடம் 32 ஆயிரத்து 600 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

