UPDATED : அக் 24, 2026 08:17 PM
ADDED : அக் 24, 2026 08:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி நபரிடம் 2.69 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தர்மபுரி, செட்டி வீதியைச் சேர்ந்த முருகேசன், 51. இவரது மொபைல் எண்ணிற்கு கடந்த 13ம் தேதி டெபிட் பரிவர்த்தனைகள் மற்றும் ஓ.டி.பி., தொடர்பான பல்வேறு குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
இதையடுத்து, அவரது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அதில் 5 தவணைகளாக முருகேசன் அனுமதியின்றி மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 998 ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முருகேசன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, மோசடி செய்யப்பட்ட தொகை ரூ. 5 லட்சத்திற்குள் இருப்பதால், மேல் விசாரணைக்காக, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றியுள்ளனர்.
