/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாபர் மசூதி இடிப்பு தினம் மாநில எல்லையில் சோதனை
/
பாபர் மசூதி இடிப்பு தினம் மாநில எல்லையில் சோதனை
ADDED : டிச 06, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மாநில எல்லை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் சோதனை செய்தனர்.
இன்று (6ம் தேதி) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில எல்லையான, கோரிமேடு, கணகசெட்டிக்குளம், கன்னியக்கோவில், மதகடிப்பட்டு ஆகிய பகுதியில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் வாகனகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதேபோல், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், கோவில்கள், கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், போலீசார் சோதனை நடத்தினர்.