/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா
/
செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூலை 05, 2025 04:40 AM

திருக்கனுார் : மணலிப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவில், தேர் திருவிழா நடந்தது.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அன்று அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை 10:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. மணலிப்பட்டு சுத்தாத்துவித சைவத் திருமடத்தின் குரு முதல்வர் குமாரசாமி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை தாங்கி, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
அமைச்சர் நமச்சிவாயம், திருமடத்தின் காப்பாளர் சேகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12:30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை ஏழு திருவிழா உபயதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் உற்சவம் முடிவடைகிறது.