/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 13, 2026 06:00 AM

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில், கும்பாபிேஷக விழா கடந்த 8ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து, மூலவர் விமானம் மற்றும் கோவில் கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், பாஸ்கர் எம்.எல்.ஏ., கோவில் திருப்பணிக்குழு தலைவர் மகாலிங்கம், வீராம்பட்டினம் மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன், கோவில் சிறப்பு அதிகாரி சுரேஷ், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயகமூர்த்தி, முன்னாள் ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் நாகராஜன், மாநில தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், வட்டார காங்., தலைவர் அய்யப்பன் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.

