/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி 6 ஆண்டுகளுக்கு பின் சென்னை தம்பதி கைது
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி 6 ஆண்டுகளுக்கு பின் சென்னை தம்பதி கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி 6 ஆண்டுகளுக்கு பின் சென்னை தம்பதி கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி 6 ஆண்டுகளுக்கு பின் சென்னை தம்பதி கைது
ADDED : நவ 21, 2024 05:33 AM
புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவியின் தம்பி கணபதி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து விட்டு, வெளிநாட்டு வேலை தேடி வந்தார்.
அப்போது, வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி நடத்தி வரும் சென்னை, வேளச்சேரியை சேர்ந்த சாந்தி மீனா என்பவர் அறிமுகமாகி, கணபதிக்கு வேலை வாங்கி வருவதாகவும், மாதம் ரூ. 3 லட்சம் சம்பளம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதற்காக, சாந்தி மீனாவிடம் கடந்த 2018ம் ஆண்டு மூன்று தவணைகளாக ரூ.12 லட்சத்து 49 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், சாந்தி மீனா, கணபதிக்கு வேலை வாங்கி தரவில்லை. பின், 2019ம் ஆண்டு பழனிவேல் சாந்தி மீனாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டுபோது, சரியான பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் பழனிவேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தார். இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு, கடந்த 6 ஆண்டுகளாக பெங்ளூருவில் தலைமறைவாக இருந்த சாந்தி மீனா, 40; அவரது கணவர் பாரதிராஜா, 44; ஆகியோரை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது, நேற்று சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சாந்தி மீனா புதுச்சேரியில் பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி வருவதாக ஏமாற்றி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

