/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த சட்ட நிபுணர்களை பின்பற்றி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அட்வைஸ்

ADDED : ஆக 11, 2025 06:50 AM
புதுச்சேரி : சிறந்த சட்ட நிபுணர்கள் பின்பற்றிய முறையை, கவனமாகப் படித்து, சட்ட மாணவர்கள் தங்களது திறமையைக் வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில், புதுச்சேரி அம்பேத்கர் சட்ட கல்லுாரியில், நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுகையில்'' சிறந்த சட்ட நிபுணர்கள் பின்பற்றிய முறையை கவனமாகப் படித்து, திறமையைக் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாதிரி நீதிமன்ற போட்டிகளின் முக்கியத்துவம் மற்றும் சட்ட மாணவர்கள் தங்கள் வக்காலத்துத் திறன்களை மேம்படுத்தவும், வழக்கறிஞர்களாக தங்கள் எதிர்காலத் தொழிலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்றார்.''
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் பேசுகையில்'' நீதிமன்றங்களில் வழக்குகளை கையாளும் விதம், வழக்கறிஞர்களின் கடமைகள், வெற்றிகரமான வழக்கறிஞர்களின் வளர்ச்சியில் இதுபோன்ற, மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்வுகள் முக்கியத்துவத்துவம் அளிப்பதாக பேசினார். ராஞ்சி தேசிய சட்ட படிப்பு மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அசோக் ஆர் பாட்டீல் பேசுகையில்'' நுகர்வு சட்டம், 2019ன் முக்கியத்துவம் குறித்தும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவிலான மூட் கோர்ட் போட்டிகளை நடத்துவதில், அதன் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பராமரித்ததற்காகவும், அதன் திறமையைப் பேணியதற்காகவும், புதுச்சேரி அம்பேத்கர் சட்ட கல்லுாரியை பாராட்டி பேசினார்.