UPDATED : அக் 14, 2026 09:53 PM
ADDED : அக் 14, 2026 09:36 PM
புதுச்சேரி: ரவுடியை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
புதுச்சேரி, திருவள்ளுவர் நகர், செட்டிகுளம் தெருவை சேர்ந்தவர் விஷ்வா ஆதித்யா, 23. ரவுடியான இவர் கடந்த 12ம் தேதி இரவு 9:30 மணிக்கு தந்தை வீரவளவனை வெளியூருக்கு அனுப்பி வைப்பதற்காக புதிய பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுள்ளார்.
பின், அவர் மறைமலையடிகள் சாலையில், நின்றிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 2 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர்.
காயமடைந்த விஷ்வா ஆதித்யாவை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுதித்தனர். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், விஷ்வா ஆதித்யாவை வெட்டியது, கோட்டக்குப்பம் ஸ்ரீதர், நைனார் மண்டபம் மாதேஷ் ஆகியோர் என தெரியவந்தது. இருவரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இவர்களை பிடிக்க விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
