/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
/
நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
ADDED : செப் 01, 2025 03:44 AM

வானுார் : சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், 31; தொழிலாளி. இவரது தந்தை இறந்த நிலையில், சித்தப்பா வீராசாமி அரவணைப்பில் இருந்தவர், கடந்த சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பிரேம், அஜித், திலீபன் உள்ளிட்ட 9 பேருடன், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற விழாவிற்கு நடைபயணமாக சென்றார்.
கடந்த 29ம் தேதி வேளாங்கண்ணியில் கொடியேற்றம் முடிந்து, நண்பர்களுடன் புதுச்சேரிக்கு வந்தார். அங்கிருந்து ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் தனியார் கெஸ்ட் அவுசில், 9 பேரும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் நண்பர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் நீரில் மூழ்கினார்.
அவரை மீட்டு வெளியே கொண்டு வந்த போது, அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.