ADDED : ஆக 16, 2025 03:10 AM

புதுச்சேரி: தமிழ்நாடு கண் மருத்துவ சங்கம் சார்பில், 72ம் ஆண்டு செர்ரிகான் 2025 மாநாடு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
மாநாட்டிற்கு, டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செர்ரிகான இயக்க செயலாளர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.
மாநாட்டிற்கு கவுரவ விருந்தினராக ஹர்பிந்தர் துவா, ஏ.ஐ.ஓ.எஸ்., தலைவர் பார்த்த பிஸ்வாஸ், டாக்டர்கள் அருள்மொழிவர்மன், சுஜாதா மோகன் ஸ்ரீராம் கோபால், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடி ஆன செர்ரிகான் பிளாஸ்டிக் இல்லா நடைமுறை கொள்கை கடைப்பிடித்தது. இங்கு முழுமையான டிஜிட்டல் அஜெண்டா, மறுசுழற்சி பொருட்கள், மீதமுள்ள உணவின் தானம், கலைஞர் அன்பு அவர்களின் மறுசுழற்சி கலைக்காட்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
மாநாட்டில் செர்ரிகான இணைத் தலைவர் சுபாஷினி, டாக்டர் நிருபமா கஸ்துாரி, அறிவியல் குழு தலைவர் கீதா பேஹேரா, பொருளாளர் அமித், வர்த்தக பொறுப்பாளர் சிவகுமார், ஆலோசகர்கள் தனிகாசலம், ரமேஷ்பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.