/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செஸ் சாம்பியன்ஷிப் பரிசளிப்பு விழா
/
செஸ் சாம்பியன்ஷிப் பரிசளிப்பு விழா
ADDED : ஜன 29, 2026 05:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் 4வது செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், கோரிமேடு மதர் தெரேசா மருத்துவ கல்லுாரியில் நடந்தது.
இதில், ஆண்கள், பெண்களுக்கான 14 மற்றும் 17 வயது பிரிவு, பொது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. ஆண்கள், 14 வயது பிரிவில் பரத், 17 வயது பிரிவில் ரோஷன், பொது பிரிவில் அகிலன், பெண்கள் 14 வயது பிரிவில் லாவண்யா, 17 வயது பிரிவில் தீபிகா, பொது பிரிவில் ைஷனா பேகம் ஆகி யோர் சாம்பியன் பட்டம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு காது கேளாதோர் விளையாட்டு கழக பொதுச் செயலாளர் பாசித் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
இதில், சட்ட ஆலோசகர் சரவணன், டாக்டர் பால்ரா ஜ், ஜகான் சந்திரசேகர், ராமச்சந்திரன், சுந்தர முருகன், அய்யப்பன், வேல்முருகன், அமைப்பு செயலாளர் சத்தியபுவனம், தலைவர் அய்யப்பன், செய்கை மொழி பெயர்ப்பாளர் ஹபிலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

