/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாட்டு கோழி குஞ்சு வளர்ப்பு பயிற்சி
/
நாட்டு கோழி குஞ்சு வளர்ப்பு பயிற்சி
ADDED : டிச 31, 2025 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில், நாட்டு இன கோழி குஞ்சுகள் வளர்ப்பது, தீவன மேலாண்மை செயல்விளக்க பயிற்சி ஏம்பலம் கிராமத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து நாட்டு இன கோழி குஞ்சுகளை பிறந்த நாள் முதல் எவ்வாறு பராமரிப்பது, தீவன மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் குளிர் மற்றும் மழைக் காலங்களில் கோழி குஞ்சுகளை பராமரிப்பது, மின்விளக்கு மூலம் வெப்பத்தை பாதுகாக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் ஆத்மா கால்நடை குழுக்களை சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைத்து பெண் விவசாயிகளுக்கும் கோழிக்குஞ்சுகள் ஆத்மா திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலர் கிருஷ்ணன் செய்திருந்தனர்.

