தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஊழியர்கள்  காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஊழியர்கள்  காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஊழியர்கள்  காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்


UPDATED : செப் 15, 2026 06:47 PM

ADDED : செப் 15, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 06:47 PM ADDED : செப் 15, 2026 06:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கவும், 2012 முதல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்கவும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆசிரியர், ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் நிலுவையில் உள்ள 7வது ஊதியக்குழு நிலுவை தொகைகள் உள்ளிட்ட பணப்பயன்களை வழகுவது, தொகுப்பூதியர், திக்கூலி தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த3 ம் தேதி அமைச்சர் ராஜ்குமார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கை குறித்து முதல்வரிடம் தெரிவித்து நல்ல முடிவு எடுப்பதாகவும், 12ம் தேதி தெரியப்படுதுவதாகவும் கூறினார். ஆனால் நேற்று வரை பல்கலை நிர்வாகம் சார்பில், எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில், 3 நாள் விடுமுறைக்கு பின்பு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை நேற்று முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளின் கதவுகளும் மூடப்பட்டது. வகுப்புகள் எதுவும் நடைபெறாததால் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் தேர்வு துறை அலுவலகம் அனைத்தும் பூட்டப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் ரவி, ஊழியர் சங்க முன்னாள் தலைவர்கள் மதியழகன், மனோகர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us