/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பு
/
ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பு
ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பு
ஜீவா குரூப்ஸ் இல்ல திருமண விழா: முதல்வர் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பு
ADDED : டிச 09, 2025 05:56 AM

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பம் ஜீவா குரூப்ஸ் உரிமையாளர் ஜெயகீர்த்தி- ஜீவா அம்மாள் மற்றும் ஓங்கூர் லாவண்யா டிரேடர்ஸ் உரிமையாளர் துளசி- மகேஸ்வரி தம்பதியினரின் இல்ல திருமண விழா வானுார், பிருந்தாவனம் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் யுவராஜ்- லாவண்யா ஆகியோரை வாழ்த்தினார்.
விழாவில், ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜான்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், நேரு, பாஸ்கர், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருள்முருகன், சுகுமரன், கோபிகா, அனந்தராமன், முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், சூரன், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் செந்தில்குமார், துணை அமைப்பாளர் குமார், வட்டார காங்., தலைவர் பரமசிவம், பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, மணக்குள விநாயகர் கல்விக் குழும டாக்டர் நாராயணசாமி கேசவன், என்.ஆர். காங்., மாநில செயலாளர் அழகு, திண்டிவனம் சவுக்கு வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
முன்னதாக, திருமண விழாவிற்கு வருகை புரிந்தவர்களை மணமகனின் சகோதரர் ஜீவா குரூப்ஸ் அரி நாராயணன் வரவேற்றார்.

