
புதுச்சேரி: சேதராப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியை ஹேமமாலினி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டம் 5 பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தார்.
ஆசிரியை கவுசல்யா தொகுத்து வழங்கினார். கண்காட்சியில் நுண்ணோக்கி, மரபணு மாதிரி, சூரிய அடுப்பு, செயற்கைகோள், மாதிரி, முப்பரிமான ஒளிப்படக்கருவி, ட்ரோன் உள்ளிட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த படைப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கண்காட்சியினை பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக புதிய இந்தியா கல் வியறிவு திட்டத்தில் மூலம் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியை சரிதா நன்றி கூறினார்.

