ADDED : செப் 05, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
அரசு செயலாளர் கிருஷ்ண மோகன் உப்பு வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் 21 மாநில நல்லாசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.
மேலும், 143 ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், 3 பசுமை பள்ளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
