ADDED : செப் 05, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் சேவா சங்கல்ப் அபியான் நிகழ்ச்சியின் ஆலோசனை கூட்டம், மணவெளி தொகுதியில் செல்வம் இல்லத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு மக்கள் சேவை, சமூக நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, வரவிருக்கும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள சேவைப் பணிகள் குறித்து விரிவாக பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் அசோக்பாபு, தங்க விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
