முதல்வர் தலைமையில் கேபினெட் கூட்டம் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம்
முதல்வர் தலைமையில் கேபினெட் கூட்டம் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம்
ADDED : ஆக 22, 2026 11:22 PM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கேபினெட் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் நாளை 14,300 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்வர் ரங்கசாமி மாலை 3:45 மணியளவில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் கேபிஜெட் கூட்டம் நடந்தது.
இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு சிவக்கொழுந்து, ராஜசேகர் மற்றும் தலைமைச் செயலாளர் சரத் சவுகான், கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய குறிப்புகள் அடங்கிய மஞ்சள் பையை தனது கையில் எடுத்து வந்து பங்கேற்றார். மாலை 6:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 10:15 மணி வரை நீடித்தது. ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, புதிய திட்டங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பட்ஜெட் அதிகாரிகள் பதிலளித்தனர். அமைச்சர்களும் புதிய ஆலோசனைகளை முன் வைத்தனர். சில துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த ஆலோசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
