ADDED : செப் 16, 2026 05:32 PM
புதுச்சேரி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:
புதுச்சேரி அரசு மற்றும் மக்களின் சார்பில் எனது பிறந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான உங்கள் தொலைநோக்கு தலைமை, உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பு ஆகியவை நாடு முழுதும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
உங்களின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா வலுவான, வளமான மற்றும் தன்னாட்சி பெற்ற எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
வளமான புதுச்சேரியை உருவாக்குவதற்கான நமது கூட்டு முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் வழிகாட்டுதலையும் புதுச்சேரி பெரிதும் மதிக்கிறது.
இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட, நிறைவான வாழ்க்கையை அருளட்டும். உங்களின் போற்றத்தக்க வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வை பெரும் வெற்றியடைந்து, நமது நாட்டிற்கு மேலும் முன்னேற்றம், வளம், அமைதி மற்றும் புகழை கொண்டு வரட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
