/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : டிச 16, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பத்தில் 1.80 கோடி ரூபாய், மதிப்பீட்டில், யு வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி பூரணாங்குப்பத்தில், பொதுப்பணித்துறை மூலம், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் யு வடிவ வாய்க்கால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் நடராஜன், இளநிலைப்பொறியாளர் கார்த்திக், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், ஆனந்தன் உட்பட கிராம முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.