/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவ கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுமான பணி முதல்வர் துவக்கி வைப்பு

ADDED : ஆக 29, 2025 03:14 AM

புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு மிஷன் திட்டத்தின் கீழ், ரூ. 13 கோடி மதிப்பீட்டில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புதிதாக 50 படுக்கைகள் கொண்ட அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, துணை இயக்குநர் ஷமிமுனிஸா பேகம், இயக்குநர் உதயசங்கர், டீன் ராமச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அருண், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம், துணை நிதி அதிகாரி விஜயகுமார், துணை பதிவாளர் சாந்தி, கண்காணிப்பு பொறியாளர் வல்லவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கட்டடம் அமைக்கும் பணிகள் 10 மாத காலத்திற்குள் நிறைவு பெறும் வகையில் அடுத்த ஆண்டு ஜூன் 23 ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு மிஷன் திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.