/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 5.72 கோடியில் புதிய பள்ளி கட்டட பணியை முதல்வர் துவக்கி வைப்பு
/
ரூ. 5.72 கோடியில் புதிய பள்ளி கட்டட பணியை முதல்வர் துவக்கி வைப்பு
ரூ. 5.72 கோடியில் புதிய பள்ளி கட்டட பணியை முதல்வர் துவக்கி வைப்பு
ரூ. 5.72 கோடியில் புதிய பள்ளி கட்டட பணியை முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மே 05, 2025 05:03 AM

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் ரூ.5.72 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் துவக்கப்பள்ளி கடந்த 1925ம் ஆண்டு கட்டப்பட்டது. பின் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட் டது. நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன், முழுமையாக இடிக்கப்பட்டது.
பள்ளியில் படித்த மாணவர்கள், அருகில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளி கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நபார்டு வங்கி 85 சதவீதம் கடனுதவியுடன், மாநில அரசு 15 சதவீதம் நிதி என, மொத்தம் 5.72 கோடி ரூபாய் மதிப்பில் 3 அடுக்கு உள்கட்டமைப்பு வசதி களுடன் கூடிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
பள்ளி கட்டடம் கட்டு மான பணி துவக்க நிகழ்ச்சிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முதல்வர் ரங்க சாமி பணியை துவக்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டட செயற்பொறியாளர் ஜெகலட்சுமி, பள்ளிக் கல்வித்துறை முதன்மை அதிகாரி குலசேகரன், உதவிப் பொறி யாளர் விக்டோரியா, இளநிலைப் பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.