/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு
/
போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : டிச 22, 2025 04:50 AM
புதுச்சேரி: போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான முகாம் நேற்று நடந்தது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 74, 698 குழந்தைகளுக்கு 425 முகாம்களிலம், பஸ் நிலையம், ரயில் நிலையம் பூங்காக்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் 31 இடங்கள் என மொத்தம் 456 இடங்களில் சொட்டு மருந்து போடப்பட்டது. முகாம் காலை 7:00 முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற்றது.
திலாஸ்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், தேசிய சுகாதாரத்துறை இயக்குநர் கோவிந்தராஜன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஷமிமுனிசா பேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.