/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் பராமரிப்பு இயந்திரம் முதல்வர் துவக்கி வைப்பு
/
கழிவுநீர் பராமரிப்பு இயந்திரம் முதல்வர் துவக்கி வைப்பு
கழிவுநீர் பராமரிப்பு இயந்திரம் முதல்வர் துவக்கி வைப்பு
கழிவுநீர் பராமரிப்பு இயந்திரம் முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மார் 24, 2025 04:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை, தேசிய துாய்மை பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் வாங்கிய கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்களை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகரப்பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்துவதற்காக 'துாய்மை உத்யாமி யோஜனா' திட்டத்தின் கீழ் தேசிய துாய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கடனுதவியுடன், புதுச்சேரி பொதுப்பணித்துறை 5 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் வாங்குவதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
அதன், முதல்கட்டமாக பொதுப்பணித்துறை 6 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்களை, புனேவை சேர்ந்த காம் அவிடா நிறுவனத்தில் இருந்து 3 கோடியே 21 லட்சத்து 48 ஆயிரத்து 960 ரூபாய்க்கு வாங்கியுள்ளன.
இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ரங்கசாமி, சட்டசபை வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரகாஷ் குமார் எம்.எல்,ஏ., மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இயந்திரம் கழிவுநீர் சுத்திகரிப்பு லாரி சேசில் பொருத்தப்பட்ட ஜெட்டிங் குழாய் மற்றும் சிறப்பு சுத்திகரிப்பு குழாய்கள் மூலம் அதிக அழுத்த நீரை செலுத்தி சுத்தம் செய்யும் திறன் கொண்டது. மேலும், அடைப்பு நீக்குதல் மற்றும் வெளியேற்றும் வசதி, மேன்ஹோலில் உள்ள வண்டல் மற்றும் பிற கழிவுப்பொருட்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் மூலம் புதுச்சேரியில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் துார்வாரி பராமரிக்கப்படும்.