/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு மானிய ஆணை முதல்வர் வழங்கல்
/
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு மானிய ஆணை முதல்வர் வழங்கல்
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு மானிய ஆணை முதல்வர் வழங்கல்
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு மானிய ஆணை முதல்வர் வழங்கல்
ADDED : அக் 25, 2025 06:59 AM

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு கள் கட்டுவதற்கான 60 சதவீத மானிய ஆணை, வெளிப்புற இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு டீசல் மானிய புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதுச்சேரியை சேர்ந்த 5 பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு 60 சதவீத மானியத்தில் தலா ரூ.72 லட்சம் வீதம், மீன்பிடி படகு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதே போல், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ள 3,000 பைபர் மீன்பிடி படகுகளில் முதற்கட்டமாக வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் நிறுவப்பட்ட பெட்ரோல், டீசல் பங்கில் பதிவு பெற்ற மற்றும் காப்பீடு செய்த 120 வெளிப்புற இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு டீசல் மானிய புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு மீன்பிடி படகு கட்டுவதற்கான ஆணை மற்றும் டீசல் மானிய புத்தகத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். சபாநாயகர் செல்வம் அமைச்சர் லட்சுமிநாராயணன், மீன்வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, துணை இயக்குநர் (இயந்திரப்பிரிவு) கோவிந்தசாமி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

