/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்
/
உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்
உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்
உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்
ADDED : நவ 05, 2025 07:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களுக்கு உதவி அரசு வழக்கறிஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் 5 வழக்கறிஞர்களை, உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அனுமதி வழங்கினார்.
அதன்படி, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 4 இளங்கோவன், மகளிர் நீதிமன்றம் - ஜெயமாரிமுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -5 ஜெரால்ட் இமானுவேல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 7 தேவேந்திரன், காரைக்கால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 இயேசு ராஜ் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதற்கான பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி, வழக்கறிஞர்களிடம் சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார். இதில், சட்டத்துறை செயலர் விக்ராந்த் ராஜா, சார்புச் செயலர் ஜான்சி உடனிருந்தனர்.