ADDED : நவ 05, 2025 07:18 AM
புதுச்சேரி: நடத்தையில் சந்தேகித்து மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏனாம், பல்லாரி வீதியை சேர்ந்தவர் நானி,26; கொத்தனார். இவரது மனைவி தினா (எ) திவ்யா, 24; இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.
திவ்யா நடத்தையில் சந்தேகித்து, நானி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுதொடர்பாக குடும்ப நல கோர்ட்டில் வழக்கில் உள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்த திவ்யா நேற்று காலை கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏனாம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், நானி, திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, நானியை தேடிவருகின்றனர்.

