/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாம் பகுதியில் குடும்பத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க கோரி மனு
/
ஏனாம் பகுதியில் குடும்பத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க கோரி மனு
ஏனாம் பகுதியில் குடும்பத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க கோரி மனு
ஏனாம் பகுதியில் குடும்பத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க கோரி மனு
ADDED : நவ 05, 2025 07:16 AM

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என, கவர்னரிடம் காங்., நிர்வாகிகள் மனு அளித்தனர்.
முன்னாள் துணை சபாநாயகர் பாலன் தலைமையில், ஏனாம் தொகுதி காங்., தலைவர் அர்தானி தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், 'மோந்தா' புயல் மற்றும் தொடர் மழையால் புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது, ஏனாம் பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கூலித் தொழிலாளர்கள் வருமானம் இழந்து சிரமப்படுகின்றனர்.
ஏனாம் பகுதியில் பல பகுதிகளில் சாலைகள் இல்லாததால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்லும்மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அரசு நடவடிக்கை எடுக்காததால், காங்., கட்சிதங்கள் சொந்த நிதியை கொண்டு தற்காலிக சாலைகள் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில், ஏனாமில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவிப்பர். எனவே, தார் சாலைகள் அமைக்கவும், புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

