தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், அமைச்சர் வாழ்த்து

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், அமைச்சர் வாழ்த்து

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், அமைச்சர் வாழ்த்து


ADDED : பிப் 17, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், கல்வி அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், கடந்த பல மாதங்களாக எடுத்த முயற்சிகள், காட்டிய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தியாகங்கள் அனைத்தும் பலன் தரவிருக்கும் பொன்னான தருணம். உங்கள் திறமை மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே உங்கள் மிகப்பெரிய பலம். தேர்வை அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுங்கள்.

வெற்றி பெற வேண்டிய அனைத்து திறன்களும் உங்களுக்குள் ஏற்கனவே உள்ளன என்பதை மறவாதீர்கள். தேர்வில் சிறந்த வெற்றியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

பொதுத் தேர்வை அச்சமின்றி, தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும். உங்கள் வெற்றி நாளைய சரித்திரமாக அமையட்டும். மாணவ செல்வங்கள் அனைவரும் வெற்றி பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்களின் கடின உழைப்பு, உங்கள் விடாமுயற்சி இந்த தேர்வின் வெற்றி மூலம் பிரகாசிக்கட்டும். மாணவ செல்வங்களின் எதிர்கால கனவுகள் அனைத்தும் ஈடேற இறைவனை வணங்கி, வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us