/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற குழுவிற்கு முதல்வர் பாராட்டு
/
இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற குழுவிற்கு முதல்வர் பாராட்டு
இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற குழுவிற்கு முதல்வர் பாராட்டு
இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற குழுவிற்கு முதல்வர் பாராட்டு
ADDED : ஏப் 25, 2025 04:43 AM

புதுச்சேரி: சிக்கிம் மாநிலத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய இளைஞர்களை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.
சிக்கிம் மாநிலத்தின் நம்ச்சி மாவட்டத்தின், யங்காங்கில் நடந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில், புதுச்சேரி தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் ஆதவன் தலைமையில் ஜெயப்பிரதா, ஜெயராஜ், சிவசங்கரி, கவுசல்யா, விக்னேஷ், நந்தகோவிந்தன், பிரியதர்ஷினி உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்று சிலம்பாட்டம், புலியாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.
சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி குழுவிற்கு தலைமை தாங்கி சென்ற சமூக சேவகர் ஆதவனை,சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், மேடைக்கு அழைத்து பாராட்டினார். இந்த சர்வதேச முகாமில் நேபாளம், பூடான், ஈரான், இந்தியாவின் 17 மாநிலங்களிலிருந்து 171 இளைஞர்கள் தங்கள் நாட்டின், மாநிலத்தின், பராம்பரிய கலைகளில் பங்கேற்றனர்.
சர்வதே மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய குழுவினரை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.