/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முதல்வர் கடனுதவி வழங்கல்
/
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முதல்வர் கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முதல்வர் கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முதல்வர் கடனுதவி வழங்கல்
ADDED : மே 29, 2025 01:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.1.40 கோடி கடனுதவியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை மற்றும் பிப்டிக் சார்பில், உணவுப் பொருள் தயாரித்தல், பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபடும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, புதுச்சேரி நகராட்சியில் இயங்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் 150 உறுப்பினர்கள், உழவர்கரை நகராட்சியில் இயங்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் 198 உறுப்பினர்கள் என மொத்தம் 348 உறுப்பினர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான கடனுதவியை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ், நகர்ப்புற வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஜெயந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.