/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி.... தீபாவளி பரிசு அறிவிப்பு; ஐந்து பொருட்களுடன் தொகுப்பு வழங்க உத்தரவு
/
3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி.... தீபாவளி பரிசு அறிவிப்பு; ஐந்து பொருட்களுடன் தொகுப்பு வழங்க உத்தரவு
3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி.... தீபாவளி பரிசு அறிவிப்பு; ஐந்து பொருட்களுடன் தொகுப்பு வழங்க உத்தரவு
3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி.... தீபாவளி பரிசு அறிவிப்பு; ஐந்து பொருட்களுடன் தொகுப்பு வழங்க உத்தரவு
ADDED : செப் 27, 2025 07:55 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 5 பொருட்கள் அடங்கிய இலவச பரிசு தொகுப்பினை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்தாண்டு தீபாவளிக்கு முன்பு திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
மீண்டும் அரிசி கடந்த 3 மாதங்களாக ரேஷனில் அரிசி வழங்கப்படவில்லை. தற்போது ரேஷனில் விடுபட்ட மாதங்களுக்கும் இலவச அரிசியை தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான டெண்டரை இறுதி செய்துள்ளது. ஜூன் மாதத்திற்கான இலவச அரிசி வரும் 6ம் தேதி முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்.
இந்த இலவச அரிசியினை புத்தம் புது பையில் புது பொலிவுடன் தர முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே, மீண்டும் இலவச அரிசி ரேஷன் கடைகளில், வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் உள்ள இலவச அரிசிக்கான தொகுப்பு பை மக்களுக்கு வழங்குவது சர்ப்ரைஸ்சாக இருக்கும்.
தீபாவளி பரிசு இதனிடையே புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு மளிகை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட ஐந்து பொருட்கள் அடங்கிய இலவச பரிசு தொகுப்பினை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் கான்பெட் கூட்டுறவு நிறுவனம் செய்து வருகிறது. டெண்டர் பணிகளையும் கான்பெட் நிறுவனம் துவக்கியுள்ளது. குறுகிய கால இ-டெண்டரையும் விட்டுள்ளது. டெண்டர் எடுக்க விரும்புவோர் வரும் 3ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பரிசு தொகுப்பு டெண்டரில் முன்னணி நிறுவனங்கள் குதித்துள்ளன.
என்ன பொருட்கள் வ ழக்கமாக, தீபாவளி பண்டிகையின்போது சர்க்கரையோடு நின்றுவிடும். இந்தாண்டு அப்படி இல்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் மக்களை கவரும் வகையில் சர்க்கரையுடன் மளிகை பொருட்களையும் வழங்க உள்ளது. அரசு வழங்க உள்ள இலவச தீபாவளி பரிசு தொகுப்பில், சர்க்கரை- 5 கிலோ, சன்பிளவர் ஆயில்-2 கிலோ, கடலை பருப்பு-1 கிலோ, ரவா-500 கிராம், மைதா-500 கிராம் அடங்கி இருக்கும்.
இந்த ஐந்து பொருட்களும் ஒரே பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளன. இந்த தீபாவளி பரிசு வரும் 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும்.
எவ்வளவு செலவு புதுச்சேரி பிராந்தியத்தினை பொருத்தவரை - 2,62,313, காரைக்கால்-60,221, மாகி-7,980, ஏனாம்-15,460 என, மொத்தம் 3,45,974 ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும். இதன் மூலம் அரசுக்கு 19 கோடி -கூடுதலாக செலவாகும்.