/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2025 04:03 AM
புதுச்சேரி: எய்ட்ஸ் நோயாளிகள், சங்க பணியாளர்களுக்கு நான்கு புதிய திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி மாநில எய்ட்ஸ் கவுன்சில் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், அவர், பேசியதாவது:
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே பிராந்தியங்களில் எச்.ஐ.வி., தொற்றுடன் வாழ்பவர்கள், மற்றும் தொற்றுள்ள குழந்தைகள் மாதந்தோறும் தொடர்ச்சியாக ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை அவசியம் எடுத்து கொள்ள வேண்டும். எச்.ஐ.வி., தொற்றுடன் வாழ்பவர்கள் உடல்நிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை நிலைப்படுத்த மாதந்தோறும் ரூ.1,250 ரூபாய் மதிப்புள்ள அரிசி, தானியங்கள் அடங்கிய சத்துணவு பெட்டகம் வழங்கப்படும். இவை அந்தந்த ஏ.ஆர்.டி., மையங்கள் மூலம் வழங்க நிதி ஒதுக்கப்படும்
சத்துணவு பெட்டகம் அரிசி 5 கிலோ, பச்சைப்பயறு 2 கிலோ, கொண்ட கடலை 2 கிலோ, துவரம் பருப்பு 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, கேழ்வரகு மாவு 3 கிலோ, பொட்டுக்கடலை 3 கிலோ, நிலக்கடலை 3 கிலோ கொண்டதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 917 பயனாளிகள், காரைக்காலில் 178, ஏனாம்-153, மாகே-8 பயனாளிகள் என 1,256 பேர் பயனடைவர். இதன் மூலம் மாதத்திற்கு 15 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும். ஆண்டிற்கு 1 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அரசுக்கு செலவாகும். இது சுகாதார துறை பட்ஜெட்டில் வழங்கப்படும்.
ஏ.ஆர்.டி., மையம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் இயங்கி வருகிறது. எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பு செலவிற்கு உதவி தொகை வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 10 ஆயிரம், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 15 ஆயிரம், கல்லுாரி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் 80 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் எச்.ஐ.வி., நோய் தொற்றுள்ள மற்றும் மஞ்சள் காமாலை, பால்வினை போன்ற நோய் தொற்றுள்ள நபர்களுடன் நேரடியாக இணைந்து பணி செய்யும் சூழலில் இருப்பதால் சங்க பணியாளர்களுக்கும், மற்ற சுகாதார துறையில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு அளித்து வரும் நோயாளி பராமரிப்பு படி தொகையை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 80 ஊழியர்களுக்கு மாதம் 4,100 ரூபாய் வீதம் மாதத்திற்கு 3 லட்சத்து 28 ஆயிரம் செலவிடப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

