/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிதாக 2 கார்கள் வாங்கிய முதல்வர் ரங்கசாமி
/
புதிதாக 2 கார்கள் வாங்கிய முதல்வர் ரங்கசாமி
ADDED : ஆக 09, 2025 07:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி புதிதாக வாங்கிய இரண்டு கார்களை மணக்குள விநாயகர் கோவிலில் பூஜை செய்தார்.
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் வலம் வருவதில் மிகவும் விருப்பம் உள்ளவர். தற்போது, கியா கார்னிவல் காரை பயன்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோக்டர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிதாக வந்துள்ள மாருதி சுசூகி இன்விக்டோ காரை வாங்கினார்.
இந்நிலையில், தற்போது அரசு சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான கியா காரும், தனது சொந்த செலவில் ரூ.1.10 கோடி மதிப்பிலான வோல்வோ காரும் புதிதாக வாங்கியுள்ளார். இந்த 2 புதிய கார்களையும் மணக்குள விநாயகர் கோவிலில் பூஜை செய்த பின், பயன்படுத்த துவங்கினார்.