/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.28 கோடியில் குடிநீர் குழாய் பணி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

ADDED : நவ 28, 2025 04:50 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் ரூ.28 கோடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதியில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) நிதி ரூ.28 கோடியில், புதிய குடிநீர் குழாய், 4,500 புதிய இணைப்பு வழங்குவதற்கான பணிகள் புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதாரப் பிரிவு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், நேற்று துவங்கியது.
விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி முதல்வர் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரச்செல்வம், கண் காணிப்பு பொறி யாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, உதவி பொறியாளர் ஸ்ரீதர், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.