/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பங்களிப்புடன் சர்க்கரை ஆலை இயக்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
தனியார் பங்களிப்புடன் சர்க்கரை ஆலை இயக்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
தனியார் பங்களிப்புடன் சர்க்கரை ஆலை இயக்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
தனியார் பங்களிப்புடன் சர்க்கரை ஆலை இயக்கப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : மார் 06, 2026 04:38 AM

திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் பாண்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, ஓய்வு பெற்ற 105 ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ரூ. 2.24 கோடி, பணிக்கொடை ரூ.6.67 கோடி, பணியில் உள்ள 55 ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.3.35 கோடி, பாண்கோஸ் பள்ளியில் பணியாற்றும் 51 ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.1.47 கோடி என, மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ. 13.76 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி சாரங்கபாணி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், முதல்வர் பேசியதாவது: புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1984ம் ஆண்டு அரவை பணி துவங்கி, பல ஆண்டுகளாக லாபத்தில் இயங்கியது. பின், அதிக நஷ்டத்தின் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆலையை லாபத்தில் இயக்க டிஸ்லாரிஸ் போடலாம் என்றால், சுற்றுச்சூழல் பாதிக்கும். எத்தனால் போட்டல் லாபம் கிடைக்கும் என்றனர். இதற்காக பல கரும்பு ஆலைகளுக்கு சென்று பார்வையிட்டு எத்தனால் போடலாம் என தெரிவித்தேன் யாரும் கேட்கவில்லை.
தொகுதி அமைச்சருக்கு எப்படியாவது ஆலையை இயக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பங்களிப்புடன் இப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை பழையபடி மீண்டும் திறக்கப்பட்டு நடத்தப்படும்' என்றார்.

