/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 06, 2026 04:37 AM

புதுச்சேரி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி, கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 55; பெயிண்டர். இவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என, மிரட்டியுள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சீனிவாசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றவாளி சீனிவாசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கினார்.

