தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 192 ஆசிரியர்களுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி தகவல்

 192 ஆசிரியர்களுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி தகவல்

 192 ஆசிரியர்களுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : பிப் 27, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 192 அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில், பணி ஆணை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 112 போலீசார்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நேற்று மாலை கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவில் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் வரவேற்றார். 112 போலீசார்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பணிநியமன ஆணை வழங்கினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;

நமது அரசு பொறுப்பேற்ற பின், 5 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா என்று கேட்டவர்களுக்கு, நமது அரசு செயல்படுத்தி காட்டியுள்ளது.

வேலை வாய்ப்பு தேர்வில் குளறுபடி என, எதிர்க்கட்சியில் சிலர் கூறுகின்றனர். குறைகளை நிருபித்துள்ளார்களா என்றால் இல்லை. அரசு பணியிடங்கள் நிரப்பக்கூடாது என, பார்க்கின்றனர். ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி தேர்வை ரத்து செய்யலாமா என பார்க்கின்றனர்.

எஸ்.ஐ., தேர்வில், ஏதாவது குறைபாடு நடந்துள்ளதா? அதற்கு வாய்ப்பில்லை. 192 அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

மக்கள் பாதுகாப்புக்காக போலீஸ் துறையை பலப்படுத்துவது அவசியம். ஐ.ஆர்.பி.என்., பணியிடங்கள் கூடுதலாக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மக்களின் நண்பன் என கூறும் வகையில் போலீசார் கடமையை சரியாக செய்ய வேண்டும்' என்றார்.

விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., உள்துறை செயலர் கேசவன், டி.ஜி.பி., ஷாலினிசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us