/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவாஜி சிலையில் இருந்து முள்ளோடை வரை மேம்பாலம்; மத்திய அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

ADDED : அக் 14, 2025 06:03 AM
புதுச்சேரி புதுச்சேரியில் இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை உயர் மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவரது எண்ணமாகும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்கு முன் குறுகிய அளவில் சாலைகள் அமைக்கப்பட்டன. அதனை சரி செய்வது அரசின் முக்கிய கடமையாகும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக சாலைகளை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, பிரதமரின் எண்ணம் பெஸ்ட் புதுச்சேரியாக வரவேண்டும் என்பது. இதன் அடிப்படையில் பெரிய வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் போது, மத்திய அரசு நமக்கு தேவையான நிதியை கொடுத்து கொண்டு இருக்கிறது. கிராம உட்புற சாலைகளை மேம்படுத்த சுமார் 200 கோடி ரூபாய் மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது.
இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கம் வரையில் மேம்பாலங்கள் அமைப்பதுடன், சிவாஜி சிலையில் இருந்து முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்கும் பணியினையும் துவங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.அதற்கு, மத்திய அரசிடம் இருந்து, மத்திய அமைச்சர் நிதி பெற்று வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது 436 கோடி ரூபாய் அளவில் துவங்கப்பட்ட இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கம் இணைக்கும் வகையில் 4 கி.மீட்டர் மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைவில் துவங்கி முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையிடம் கோரப்பட்டுள்ளது.