/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' 'மாஜி' முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
/
'முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' 'மாஜி' முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
'முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' 'மாஜி' முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
'முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' 'மாஜி' முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ADDED : நவ 15, 2024 04:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத முதல்வரும், உள்துறை அமைச்சரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரையில் உள்ள நேருவின் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, காங்., சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமிகூறியதாவது:புதுச்சேரியில் சிவசங்கர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரில் சென்று ராமு என்ற ரவுடி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன.
முதல்வர் ரங்கசாமியும் அமைச்சர் நமச்சிவாயமும் காவல்துறையை செயல்பட விடாமல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
இன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாளை எம்.பி.,க்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை எனில், என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சி புதுச்சேரியில் இருந்து என்ன பயன்? முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது:
தற்போது புதுச்சேரிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் சம்மந்தமே இல்லை. முதல்வரும், அமைச்சர்களும் இது சம்மந்தமாக கவலைப்படுவதில்லை. இந்த நிலைமையில், எப்படி, பெண்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
இது தான் இன்றைய புதுச்சேரி அரசின் நிலைப்பாடு. முதல்வர் ரங்கசாமி அரிசி, தீபாவளி பொருட்கள், சம்பளம், உள்ளிட்ட எதையுமே வழங்குவதில்லை.அவர் அறிவிப்பு முதல்வராக இருந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.