/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பைகள் அள்ளும் பணியை சரியாக செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து முதல்வர் ரங்கசாமி எச்சரிக்கை
/
குப்பைகள் அள்ளும் பணியை சரியாக செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து முதல்வர் ரங்கசாமி எச்சரிக்கை
குப்பைகள் அள்ளும் பணியை சரியாக செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து முதல்வர் ரங்கசாமி எச்சரிக்கை
குப்பைகள் அள்ளும் பணியை சரியாக செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து முதல்வர் ரங்கசாமி எச்சரிக்கை
ADDED : அக் 03, 2025 01:37 AM
புதுச்சேரி: குப்பை அள்ளும் பணியை சரியாக செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி அரசு, உள்ளாட்சித் துறை சார்பில், காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த துாய்மையே சேவை- 2025 மற்றும் துாய்மை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே துாய்மை குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்களுக்கும் துாய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.முன், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் துாய்மை பணியில் ஈடுபடுவர்.
அப்போது, சில குறைகள் இருக்கும். தற்போது அந்த நிலை மாறி ஒப்பந்தம் அடிப்படையில் துாய்மை பணியை பல நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளோம். குப்பைகளை தொடர்ந்து அள்ள வேண்டும். எடை அதிகமாக இருந்தால் பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக மண்ணை அள்ளிச்செல்வதாக கேள்வி படுகின்றோம். குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும் தகவல் வருகின்றன.
இதுபோன்ற நிலை இருந்தால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ஆட்கள் நியமனம் செய்து அவர்ளே குப்பை அள்ளும் பணியை செய்யலாமே.குறைகள் இல்லாமல் இருக்கத்தானே ஒப்பந்தம் விடுகிறோம்.
குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதற்கு யார் காரணமாக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாலும் செய்துவிட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கலாம்.குப்பைகள் எடுக்காவிட்டால் யாருக்கு கஷ்டம். அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் செயல் தான் அது.
குப்பைகளை எடுத்துவிட்டு அரசிடம் முறையிடலாம். 100 பேர் வேலை செய்ய வேண்டிய நிலையில் 50 பேர் மட்டும் வேலை செய்தால் எப்படி?இதில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பணிகள் சரியாக இருந்தால் குறைகள் இருக்காது. அப்படி இருந்தால் துாய்மையான, சுத்தமான, ஆரோக்கியமான புதுச்சேரியாக இருக்கும்' என்றார்.