/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி 75வது பவள விழா
/
முதல்வர் ரங்கசாமி 75வது பவள விழா
ADDED : நவ 17, 2025 02:49 AM

புதுச்சேரி: என்.ஆர். காங்., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி மாநில நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மற்றும் முதல்வர் ரங்கசாமி யின் 75வது பவள விழா நடந்தது.
புதுச்சேரி என்.டி., மஹாலில், நடந்த நிகழ்ச்சியில், என்.ஆர்.,காங்., பொதுச்செயலாளர் ஜெய பால் தலைமை தாங்கினார். என்.ஆர்.காங்., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி மாநில தலைவர் அன்பு முன்னிலை வகித்தார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சந்திர பிரியங்கா, முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து, முன்னாள் அமைச்சர் தியாகராஜன், செயலாளர் ஜவகர், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, மகளிர் ஆணையத்தின் தலைவி ஜோதி, மாநில மகளிர் அணி தலைவி ரேவதி, மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

