/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அத்வானிக்கு பாரத ரத்னா விருது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
அத்வானிக்கு பாரத ரத்னா விருது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
அத்வானிக்கு பாரத ரத்னா விருது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
அத்வானிக்கு பாரத ரத்னா விருது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : பிப் 04, 2024 03:30 AM
புதுச்சேரி : பாரத ரத்னா விருதை பெற உள்ள அத்வானிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தேசத்தின் பெருமைக்குரிய தலைவர்களின் ஒருவராக திகழக்கூடிய அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
பொதுவாழ்வில் துாய்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து அரசியலில் ஒரு முன் மாதிரியை உருவாக்கியவர்.இந்தியாவின் கலாசார மாறுபாடுகளை தேச ஒற்றுமை என்னும் குடையின் கீழ் ஒருங்கிணைப்பதில் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர்.
தேசப்பற்றை தனது உயிர் மூச்சாகக் கொண்ட அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டதக்கது.தேசத்தின் உயர்ந்த அங்கீகாரமான பாரத ரத்னா விருதை பெற உள்ள அத்வானிக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.