தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்

2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்

2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்


UPDATED : அக் 30, 2026 05:59 PM

ADDED : அக் 30, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:59 PM ADDED : அக் 30, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விரைவில் 2 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை சார்பில், எல்.டி.சி., பணிக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி 115 பேர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. அரசு செயலர் குமார் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கினர். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வாழ்த்தி பேசினார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

இளநிலை எழுத்தர் பணி என்பது அடிப்படை நிர்வாகத்திற்கு தேவையான ஒன்று. மக்களுக்கு சரியாக கிடைக்கின்ற வகையில் கோப்புகள் வரணும். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சுமார் 5 ஆயிரம் படித்த இளைஞர்கள் மூலம் அரசு பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. பள்ளி கல்வியில் மட்டுமல்ல உயர்கல்வியிலும் 100 சதவீதம் கல்வி கற்றவர்கள் என்ற நிலையை அரசு உருவாக்க பொறுப்பேற்று இருக்கிறது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு பட்டதாரி ஒருங்கிணைந்த தேர்வு, பத்தாவது, பிளஸ் 2 ஒருங்கிணைந்த தேர்வு நடத்த வேண்டும். தற்போது 115 எல்.டி.சி., பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.

விரைவில் இரண்டாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க சேதராப்பட்டு கரசூரில் புதிய தொழிற்பேட்டை துவங்கப்படும். தனி நபர் வருமானத்தில் புதுச்சேரி, இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது’ என்றார்.

விழாவில் செந்தில் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத்சவுகான், சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், முருகேசன், கண்காணிப்பாளர் நாராயணன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us