தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜனநாயகத்தை காப்போம் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஜனநாயகத்தை காப்போம் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஜனநாயகத்தை காப்போம் கலந்துரையாடல் நிகழ்ச்சி


UPDATED : அக் 30, 2026 05:59 PM

ADDED : அக் 30, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:59 PM ADDED : அக் 30, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம், வன்முறையாளர்களை அகற்றுவோம்” என்ற முழக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

திருக்கனுார் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி மோகன் குமார், வில்லியனுார் மாவட்ட தலைவர் அனிதா, தொகுதி பொறுப்பாளர் கண்ணன், தலைவர் அனுசுவை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘வரும் 3ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் ஜனநாயகத்தை காப்போம், வன்முறையாளர்களை அகற்றுவோம் பேரணியில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டை எந்த ஒரு அந்திய சக்தியாலும், தீயசக்தியாலும் அழித்து விட முடியாது என்பதை இந்த பேரணி மூலம் நிரூபிக்க வேண்டும்’ என்றார்.

கரப்பான் பூச்சியை நசுக்கிடலாம்

பா.ஜ., கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியபோது, கரப்பான் பூச்சி ஒன்று மேடையில் விழுந்து ஓடியது. அதைகண்ட நிர்வாகிகள் கரப்பான் பூச்சி வந்துள்ளது என்றனர். அதற்கு, அமைச்சர் ‘உடனடியாக கரப்பான் பூச்சியை நசுக்கிடலாம்’ என்றார். அதை கேட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us