/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி ஆய்வு
/
கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி ஆய்வு
கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி ஆய்வு
கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு முதல்வர் ரங்கசாமி ஆய்வு
ADDED : நவ 30, 2024 04:45 AM

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் நீடித்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக வலுவடைந்து, இன்று காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட, 6 மாவட்டங்களுக்கு நேற்றும், இன்றும் 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று காலை முதல்வர் ரங்கசாமி, கடற்கரையை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த கிழக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜை அழைத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

