/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல்

ADDED : மார் 13, 2024 06:51 AM
புதுச்சேரி : போலீசார் ரோந்து பணிகளை கவனமாக மேற்கொண்டால், போதை பொருட்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காவல்துறையினருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், போலீசில் நிறைய குறைகள் இருந்தது. அந்த குறைகளை நீக்கி கொண்டே வருகிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசை பலப்படுதத வேண்டும் என்ற எண்ணத்தில் காலி பணியிடங்களை நிரப்பி முடித்து உள்ளோம். தற்போது ஊர்க்காவல் படை வீரர் பணியை நிரப்ப உடற்தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அழகான அமைதியான மாநிலம். இதன் காரணமாகதான் நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர். புதுச்சேரி இப்படியே இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மக்கள் அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும்.
இப்போது பெரிய பிரச்னையாக பேசப்படுவது போதை பொருள் புழக்கம் . இவற்றை . தடுக்க , அக்கறையோடு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களை போதை பொருள் சீரழிக்கிறது. போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
குறிப்பாக, பள்ளி, கல்லுாரியை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். போலீசார் கவனமாக ரோந்து பணி மேற்கொண்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம். எங்கிருந்து போதை பொருள் வருகிறது என்பதை கண்டறிந்து தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.