/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி வாழும் சித்தர் அமைச்சர் ஜான்குமார் 'லக லக'
/
முதல்வர் ரங்கசாமி வாழும் சித்தர் அமைச்சர் ஜான்குமார் 'லக லக'
முதல்வர் ரங்கசாமி வாழும் சித்தர் அமைச்சர் ஜான்குமார் 'லக லக'
முதல்வர் ரங்கசாமி வாழும் சித்தர் அமைச்சர் ஜான்குமார் 'லக லக'
ADDED : ஜூலை 19, 2025 02:57 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில் சித்தர்கள் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கம் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
மாநாட்டை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து ஆய்வரங்க சிறப்பு மலரை வெளியிட்டார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார், அரசு செயலர் முகமது அசான் அபீது, இயக்குநர் முரளிதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தமிழ் அறிஞர் ஆதிகேசவன், பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் இளமதி ஜானகிராமன், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி, தமிழ் துறைத் தலைவர் சேதுபதி, உதவி பேராசிரியர் குப்புசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முன்னதாக, தமிழ் வளர்ச்சிக் கழகம் சிறப்புப் பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வரவேற்றார். முனைவர் செங்கமலத்தாயார் தொகுத்து வழங்கினார்.
இதில், பேசுகையில், 'தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் சித்தர் முதல்வர் ரங்கசாமி. அவர் எது சொன்னாலும் நடந்துவிடும். சனிக்கிழமைதோறும் அவரிடம் ஆசிபெற பலரும் வந்து விடுவர். புதுச்சேரியில் வாழும் சித்தர் என்றால் முதல்வர் தான்.
முதல்வர் எதிர்காலத்தில் உயிர் துறந்தால் ஒரு கோடி பேருக்கு மேல் அவரை சித்தராக வழிபடுவார்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதுபோன்ற முதல்வரை நாம் பெற்றுள்ளோம்.
அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் புதுச்சேரியில் இருப்பதால் நிறைய பிரச்னைகள் தீர்ந்து வருகிறது' என்றார்.